தேவையான பொருட்கள்

  1. 150கிராம்முந்திரி
  2. 1/2 கப்பால்
  3. 100கிராம்பால் பவுடர்
  4. 200கிராம்சக்கரை பொடித்தது
  5. 50கிராம்பிஸ்தா
  6. ஒரு சிட்டிகைபச்சை கலர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    100 கிராம் முந்திரி பருப்பை நன்கு மிக்ஸியில் அரைத்து பால் ஊற்றி கலக்கி அடுப்பில் வைக்கணும்

  2. 2

    சிறிது கெட்டியாக ஆன பிறகு பால் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும். நெய் சேர்த்த பிறகு சுருண்டு வரும். அதன் பின் அடுப்பில் இருந்து இரக்கணும்.

  3. 3

    நன்கு ஆறின பிறகு பொடித்த சர்க்கரை நெய் சேர்த்து பிசையவும். தேவை பட்டால் பால் பவுடர் சேர்த்துக்கலாம்

  4. 4

    உள் வைக்கும் பூரணத்திற்கு 50கிராம் முந்திரி பருப்பு 50கிராம் பிஸ்தா பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பின் பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

  5. 5

    இரண்டு கரண்டி பாலில் பச்சை கலர் பொடி சிறிது சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமாக பிஸ்தா பூரணத்திற்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  6. 6

    இப்பொழுது மேல் மாவு பூரணம் தயார். ஒரு கொழுக்கட்டை அச்சை வைத்து பிடித்த வடிவத்திற்கு கொழுக்கட்டை அச்சிற்குள் முதல் மேல் மாவு வைத்து அதன் பின் பூரணம் வைத்து கொழுக்கட்டைகளை செய்யவும். மிகவும் ருசியான காஜு பிஸ்தா கொழுக்கட்டைகள் தயார்.

  7. 7

    சுவையான கொழுக்கட்டைகள் உண்ணலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes