டொமேட்டோ இட்லி

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பால் ரவை
  2. 1 வெங்காயம் -(பொடியாக நறுக்கியது)
  3. 4தக்காளி - (பொடியாக நறுக்கியது)
  4. கொஞ்சம்கறிவேப்பிலை
  5. கொஞ்சம்மல்லித்தழை - பொடியாக நறுக்கியது
  6. 1 டீஸ்பூன்உளுந்தம் பருப்பு
  7. 1 டீஸ்பூன்கடலைப்பருப்பு
  8. 1 டீஸ்பூன்கடுகு
  9. 15முந்திரிப் பருப்பு
  10. 2 டேபிள் ஸ்பூன்நெய்
  11. 1 கப்தயிர்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  14. 1 டீஸ்பூன்மிளகாய் தூள் ‌‌

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாய் அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து லோ ஃப்ளேமில் சிவக்கும் வரை வதக்கவும்.இதனுடன் முந்திரிப் பருப்பை சேர்த்து வதக்கவும்.முந்திரிப்பருப்பு சிவந்ததும் ரவையை சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை வறுத்து ரவையை வேறொரு பவுளில் மாற்றி ஆற விடவும்.

  2. 2

    அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.கடுகு பொட்டியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளியை சேர்த்து, தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கி தக்காளி மென்மையாக வெந்து வரும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.

  4. 4

    தக்காளி வெந்து வரும் போது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி தக்காளி மசிந்து வரும் வரை வதக்கவும்.

  5. 5

    பிறகு இதனுடன் மல்லி இலை நறுக்கியதும் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து இறக்கி ஆற வைக்கவும்.

  6. 6

    ஆறியதும் இதனை வறுத்து ஆற வைத்திருக்கும் ரவையுடன் சேர்த்து, ஒரு கப் தயிரும் சேர்த்து, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இதனை 10 நிமிடம் செட் ஆவதற்கு வைக்கவும்.

  7. 7

    10 நிமிடம் கழித்து இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  8. 8

    இட்லி பானையை அடுப்பில் வைத்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், இட்லி தட்டுகளில் எண்ணெய் புரட்டி, இந்த கலவையை ஊற்றி இட்லி பானையில் வைத்து ஹை ஃப்ளேமில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  9. 9

    சுவையான டொமேட்டோ இட்லி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes