நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)

Pavumidha
Pavumidha @cook_13801083
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 கப் அரிசி
  2. 2 வெங்காயம்
  3. 5டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 6டீஸ்பூன் நெய்
  5. 1டீஸ்பூன் எண்ணெய்
  6. 2 கிராம்பு
  7. 1 பட்டை
  8. 2ஏலக்காய்
  9. தக்காளி
  10. 1 கேரட்
  11. 1/4 கப் தயிர்
  12. 4 கப் தண்ணீர்
  13. 3டீஸ்பூன் மிளகாய் தூள்
  14. 2 பச்சை மிளகாய்
  15. 1டீஸ்பூன் கரம் மசாலா
  16. 1டீஸ்பூன் உப்பு
  17. 1 கப் தேங்காய் பால்
  18. 1/4 கப் புதினா
  19. 1/4 கப் மல்லி இலை
  20. 1தக்காளி தொக்கு ::
  21. 5 தக்காளி
  22. 10 சின்ன வெங்காயம்
  23. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  24. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  25. 1டீஸ்பூன் உப்பு
  26. 3டீஸ்பூன் மல்லி இலை
  27. 3 பூண்டு
  28. 1 காய்ந்த மிளகாய்
  29. 1டீஸ்பூன் கடுகு உளுந்து பருப்பு
  30. 2டீஸ்பூன் கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெய் தேங்காய் சாதம் செய்ய - முதலில் பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை சென்றவுடன் தக்காளி சேர்த்து கிளறவும்.பின்னர் இதனுடன் கேரட் சேர்த்து கிளறவும்

  3. 3

    மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும். பின்னர் சிறதளவு தயிர் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்

  4. 4

    நன்றாக கிளறிய பின் மல்லி தழை மற்றும் புதினா சேர்த்து கிளறி தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும்.தண்ணீர் கொதித்த பின்னர் அரிசி சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்

  5. 5

    தண்ணீர் வற்றி அரிசி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதனை லேசாக கிளறி சிறிது நேரம் மூடி வைத்து எடுத்தால் சுவையான நெய் தேங்காய் சாதம் தயார்.

  6. 6

    தக்காளி தொக்கு::கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்னர் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  7. 7

    வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து தக்காளியை வேக விடவும்.15-20நிமிடம் பின் மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான தக்காளி தொக்கு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_13801083
அன்று
Chennai

Similar Recipes