தக்காளி தொக்கு

Sahana D
Sahana D @cook_20361448

#lockdown
#book
ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 15தக்காளி
  2. புளி எலுமிச்சை அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  5. வர மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  6. பெருங்காய தூள் சிறிதளவு
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. வெல்லம் 1 கட்டி சிறியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி புளி இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பாத்திரம் அல்லது குக்கரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்

  2. 2

    அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு பெருங்காயம் வெல்லம் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கறிவேப்பிலை கடலை பருப்பு வதக்கி தக்காளி வதக்கிய தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஆற வைத்து கொள்ளவும். தக்காளி தொக்கு ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes