தேவையான பொருட்கள்

35 minutes
4 பரிமாறுவது
  1. பூண்டு 4
  2. இஞ்சி 1/2 கப்
  3. தக்காளி 2
  4. காய்ந்த மிளகாய் 2
  5. புளி சிறிதளவு
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயத்தூள் சிறிதளவு
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. காஷ்மீர் மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  13. வெல்லம் சிறு துண்டு
  14. நல்லெண்ணெய் 3 குழிக்கரண்டி

சமையல் குறிப்புகள்

35 minutes
  1. 1

    பூண்டு மற்றும் இஞ்சியை தோள் நீக்கி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் பூண்டு பல், இஞ்சி, தக்காளி,காய்ந்த மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    வானலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த பேஸ்ட், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

  4. 4

    அடுப்பை குறைந்த தீயில் வைத்து 5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும். நன்கு பச்சை வாசனை இல்லாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.கடைசியாக வெல்லம் சிறு துண்டு சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கவும். சூப்பரான இஞ்சி பூண்டு தொக்கு தயார். இது அனைத்திற்கும் சைடிஸ் ஆக சூப்பராக இருக்கும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes