தேவையான பொருட்கள்

  1. தக்காளி 3
  2. வர மிளகாய் மூன்று
  3. பச்சை மிளகாய் 3
  4. வெந்தயம் அரை டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
  6. கடுகு அரை டீஸ்பூன்
  7. வெய்யில் உளுந்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. வெல்லம் சிறிதளவு
  11. என்னை 2 குழிக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும் சிறு துண்டுகளாக அரிந்து அத்துடன் வர மிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்தவுடன் உளுந்தம்பருப்பு சேர்க்கவும் அதனுடன் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் கருகப்பிலை வதங்கியவுடன் அதனுடன் அரைத்து வைத்த கலவையில் அதனுடன் சேர்க்கவும் இன்னொரு கடாயில் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வறுத்த வெந்தயத்தை பொடி செய்யவும் அரைத்த விழுது கெட்டியாகி வரும்பொழுது அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி சிம்மில் வைத்து மூடிவைக்கவும் அதன் பின் தேவையான வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ளவும்

  4. 4

    நன்கு கெட்டியாகி வரும்பொழுது அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி தட்டம் போட்டு மூடி வைக்கவும் சிறிது நேரத்தில் எண்ணெய் மேலே கட்டி மேலே வரும் பொழுது அதனுடன் வறுத்து பொடித்த வெந்தயத்தை சேர்த்து கலக்கவும் இதனுடன் தேவையான உப்பு சேர்த்தால் சுவையான தக்காளி தொக்கு ரெடி இது இட்லி தோசை சப்பாத்தி அனைத்துக்கும் இணையான சைடிஷ்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

Similar Recipes