ரவா கிச்சடி /கேரட்  /சுஜி

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. ஒரு தம்ளர் ரவை
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு பெரிய தக்காளி
  4. நாலு பச்சை மிளகாய்
  5. கால் கப் கேரட்
  6. ரெண்டு ஸ்பூன் பீன்ஸ்
  7. ரெண்டு ஸ்பூன் குடைமிளகாய்
  8. ரெண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு
  9. கால் கப் பச்சை பட்டாணி
  10. ஒரு ஸ்பூன் இஞ்சி
  11. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. தாளிக்க
  14. கால் கப் எண்ணெய்
  15. ஒரு ஸ்பூன் கடுகு
  16. ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  17. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய அளவில் காய்கறிகளை பொடியாக அரிந்து கொள்ளவும் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும் 4 பச்சைமிளகாயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன்அளவிற்கு இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பெரிய வாணலியில் கால் கப் எண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும். அதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும். உடன் இஞ்சி சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பொடியாக அரிந்த கேரட், பீன்ஸ், குடமிளகாய் உருளைக்கிழங்கு எல்லா காய்களையும் சேர்த்து வதக்கவும். என்னிடம் பட்டாணி இல்லை அதனால் சேர்க்கவில்லை.

  3. 3

    ஒரு டம்ளர் வரை தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் காய்கறிகளை வேக விடவும். காய்கறிகள் வெந்தவுடன் தண்ணீர் மீதம் உள்ளதை பார்த்து 2
    1/2லிருந்து 3 தம்ளர் வரை தண்ணீர் சேர்க்கவும். (ஒரு டம்ளர் ரவைக்கு மூன்று டம்பளர் தண்ணீர்1:3).

  4. 4

    தண்ணீர் நன்கு கொதித்தவுடன், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். பிறகு எடுத்து வைத்த ஒரு டம்ளர் ரவை தூவி, கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும். வெந்த ரவையை தொட்டுப் பார்த்து கையில் ஒட்ட வில்லை என்றால் அடுப்பை நிறுத்தி விடவும். சூடான சுவையான ரவா கிச்சடி தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தயிர் நன்றாக இருக்கும். மேலும் மாங்காய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes