தேவையான பொருட்கள்

  1. ரவை - 1/4 கிலோ
  2. காரட்,பீன்ஸ்,பட்டாணி,
  3. (மூன்றும் சேர்த்து) - 1 கப்
  4. 1வெங்காயம் -
  5. 1தக்காளி -
  6. பச்சை மிளகாய் -3
  7. கருவேப்பிலை, மல்லி - சிறுதளவு
  8. கடுகு - 1 ஸ்பூன்
  9. உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  10. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. .உப்பு - தேவையான அளவு
  13. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ரவையை பச்சை வாசம் போகும் வரை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு, சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி, தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காய்கறிகளை சேர்க்கவும், மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும்.
    நன்கு வதங்கியதும் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    தண்ணீர் நன்கு கொதித்ததும் ரவையை மெதுவான சேர்த்து கட்டி விழாமல் கிளற வேண்டும்

  5. 5

    ரவை ஒட்டாமல் நன்கு சுருண்டு வந்த்தும் இறக்கவும்.
    அருமையான ரவா கிச்சடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes