கோதுமை ரவை கிச்சடி🥕

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#goldenapron3 #carrot#book
கோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3பேர்
  1. ஒரு கப் கோதுமை ரவை
  2. 2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
  3. ஒரு மீடியம் சைஸ் தக்காளி
  4. 3 பச்சை மிளகாய்
  5. 1வர மிளகாய்
  6. ரெண்டு ஸ்பூன் காரட்
  7. 2 ஸ்பூன்பீன்ஸ்
  8. 2 ஸ்பூன் பட்டாணி
  9. 2 ஸ்பூன் குடைமிளகாய்
  10. ஒரு ஸ்பூன் இஞ்சி
  11. ஒரு சிறிய துண்டு பட்டை
  12. இரண்டு கிராம்பு
  13. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. உப்பு தேவையான அளவு
  15. ரெண்டு ஸ்பூன் பொடியாக அரிந்த கொத்தமல்லி
  16. சிறிது கருவேப்பிலை
  17. தாளிக்க
  18. 3 ஸ்பூன் எண்ணெய்
  19. 1 ஸ்பூன்
  20. 1ஸ்பூன் ஸ்பூன் கடுகு
  21. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  22. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கேரட், பீன்ஸ், குடை மிளகாய், மூன்றையும் பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். ஒரு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். 3 பச்சை மிளகாயை இரண்டாக அரிந்து கொள்ளவும். 1 வரமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் இஞ்சி அறிந்து கொள்ளவும். ஒரு கப் கோதுமை ரவை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பெரிய வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய வரமிளகாய், இஞ்சி சேர்க்கவும். பிறகு அறிந்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும். வதங்கிய பின் மேற்கூறிய காய்கறி வகைகளை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காய்கறி இரண்டு நிமிடம் வதக்கிய பின், ஒரு டம்ளர் கோதுமை ரவை க்கு இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ரவையை கொட்டி கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.

  4. 4

    குக்கரில் செய்வது என்றால் குக்கரை மூடி வெயிட் போட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். வானலியில் செய்வதென்றால் ரவையை கொட்டி உடன் நன்கு கிளறி மூடி வைத்து 20 நிமிடங்கள் வேகவிடவும். குறிப்பிட்ட நிமிடம் வெந்தவுடன் மூடியைத் திறந்து நன்கு கிளறி விடவும். கோதுமை ரவை உப்புமா ரெடி. தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை சட்னி அல்லது சர்க்கரை அல்லது தயிர் தொட்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes