தேவையான பொருட்கள்

  1. கேரட்-250 கி
  2. கடலைப்பருப்பு-100கி
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-1
  5. மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
  6. பச்சை மிளகாய்-3
  7. மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
  8. பூண்டு-10 பல்
  9. கடுகு உளுத்தம் பருப்பு-1ஸ்பூன்
  10. தேங்காய்-1(துருவியது)
  11. எண்ணெய்-தாளிக்க
  12. உப்பு-தேவையான அளவு
  13. கறிவேப்பிலை-சிறிதளவு
  14. கொத்தமல்லி-சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலைப்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    பின்னர் அதில் பூண்டு சேர்த்து வதக்கவும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    இப்போது அதில் கேரட் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  6. 6

    பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்

  7. 7

    பின்னர் அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  8. 8

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

  9. 9

    பின்னர் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima banu
Fathima banu @cook_18747168
அன்று
Chennai

Similar Recipes