பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சீஸ் சாஸ்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சுவையான, சத்தான, பாஸ்டா #hotel

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 4 கப் பாஸ்டா நூடுல்ஸ், ஆர்கானிக் கோதுமை
  2. ½ கப் எண்ணை (olive oil preferably)
  3. 2 கப் வெங்காயம், மெல்லிசாக நறுக்கியது
  4. 1 கப் காளான் குடைகள், வெட்டியது
  5. 4பச்சை மிளகாய், துண்டாக்கியது
  6. 2 அங்குலம் இஞ்சி, தோலுரித்து நறுக்கியது
  7. 6 கப் தக்காளி மெல்லிசாக நறுக்கியது
  8. 6பல் பூண்டு, நசுக்கியது
  9. 2 கப் சீஸ் (ஷ்ரெட்டட் shredded)
  10. 1 மேஜை கரண்டி ஆறிகனோ(oregano)
  11. 1 மேஜை கரண்டி பேசில்(basil),
  12. 1 மேஜை கரண்டி பார்சலி
  13. 1 மேஜை கரண்டி கொத்தமல்லி
  14. தேவையானஉப்பு
  15. 1 மேஜை கரண்டி மிளகு பொடி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் 10 கப் தண்ணீரை கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க. அதில் நூடுல்ஸ் போடுக. அப்போ அப்போ கிளறி வேகவைக்க. குழைய வைக்க வேண்டாம். al dente ஆக இருக்க வேண்டும். வடித்து தனியாக எடுத்து வைக்க..

  3. 3

    சாஸ் தயாரிக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் பச்சை மிளகாய், வெங்காயம், வதக்க, வெங்காயம் பிரவுன் ஆகட்டும். காளான், இஞ்சி சேர்த்து வதக்க—5 நிமிடங்கள். தக்காளி, பூண்டு சேர்த்து வதக்க. 4 கப் நீர் சேர்க்க. கொதித்த பின் முடி நெருப்பை குறைத்து வேகவைக்க-10 நிமிடங்கள்.

  4. 4

    சீஸ் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்க. சீஸ் உறுகினபின் உப்பு சேர்த்து கிளற. எல்லாம் நன்றாக சேர்த்து சாஸ் தயாரானதும் ஆறிகனோ(oregano), பேசில்(basil), பார்ஸ்லி, கொத்தமல்லி, சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க. சாஸ் குழிவான பெரிய கிண்ணத்தில் சேர்க்க

  5. 5

    மேலே நூடுல்ஸ் போடுக மிளகு பொடி தூவுக. சுவைத்து பரிமாறுக. விரும்பினால் சாப்பிடும் பொழுது சிறிது சீஸ் மேலே தூவிக்கலாம்.

    பாஸ்டா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes