சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கீரையில் கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் .புற்று நோய் தீர்க்கவும். கல்லீரல் பாதுகாக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கட்டு அரைக்ககீரை
  2. 100 கிராம் பாசிப்பருப்பு
  3. 50 கிராம் துவரம் பருப்பு
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1/2ஸ்பூன் மிளகாய்தூள்
  7. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. தாளிக்க
  10. கடுகு 1/2 டீஸ்பூன்
  11. உளுந்து1/2டீஸ்பூன்
  12. சீரகம் 1/4 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை 2 ஆர்க்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரைக்கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    பருப்புகளை களைந்து ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின் பருப்பு வெந்ததும் அதில் நறுக்கிய கீரையை மற்றும் சீரகம் நறுக்கிய வெங்காயம் பாதி மட்டும் சேர்க்கவும்.

  3. 3

    அதிலேயே மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து வேக விடவும். கீரை பாதி வெந்ததும் உப்பு சேர்த்து கலந்து கிளறவும்.

  4. 4

    கீரை வெந்ததும் இறக்கி வைத்து ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு உளுந்து சீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள மீதி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். கறிவேப்பிலை யும் சேர்த்து வதக்கவும். பிறகு அதை வெந்த கீரை களில் கொட்டி கிளறி அடுப்பில் வைத்து கலந்து எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432
அன்று

Similar Recipes