உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு
  2. 1/4 கப் வேகவைத்த பச்சை பட்டாணி
  3. 2 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட்
  4. 1நறுக்கிய வெங்காயம்
  5. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. உப்பு
  9. 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி இலை
  10. 2 கப் சேமியா
  11. பறவை முட்டைக்கு
  12. 1/2 கப் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு
  13. உப்பு
  14. சிறிதுபுதினா இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பட்டாணி மற்றும் மசித்த உருளைக்கிழங்கு துருவிய கேரட் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    சேமியாவை சிறிது சிறிதாக உடைத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    பிசைந்த உருளைக்கிழங்கு பெரிய உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு கூடை போல் தயார் செய்து கொள்ளவும்

  5. 5

    தயார் செய்து வைத்த கட்லெட்டை முதலில் மைதா சோள மாவு கரைசலில் நன்றாக முழுவது படும்படி தேய்த்து பிறகு சேமியாவில் முழுவதும் தேய்த்து படத்தில் காட்டியவாறு எடுத்துக் கொள்ளவும்

  6. 6

    இதேபோல் எல்லாவற்றையும் தயாரித்துக் கொள்ளவும் பிறகு கடாயில் எண்ணெயை சூடேற்றி எண்ணெயை நன்றாக காய்ந்ததும் மிதமான மற்றும் குறைந்த தீயில் கட்லெட்டுகளை பொரித்தெடுக்கவும் (படத்தில் காட்டியவாறு கரண்டியின் உதவியால் எண்ணெய் தெளித்து மேலே உள்ள குழிகளில் உள்ள சேமியாவை பொரிக்கவும்)

  7. 7

    இதே போல அனைத்து கட்டணங்களையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  8. 8

    பறவை கூட அலங்கரிக்க முட்டை புல் தயாரிக்க வேக வைத்த உருளைக்கிழங்கு சிறிது உப்பு கலந்து நன்றாக மசித்து படத்தில் காட்டியவாறு சிறு மூட்டையாக தயாரித்துக் கொள்ளவும்

  9. 9

    படத்தில் காட்டியவாறு முட்டை போல் உருளைக்கிழங்குகளை வைக்கவும் அலங்கரிக்க இதனுடன் புதினாவைச் சேர்க்கவும்

  10. 10

    சுவையான உருளைக்கிழங்கு சேமியா கட்லெட் தயார் இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்

  11. 11

    நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes