எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1/2 கப்பாசுமதி அரிசி
  2. 1 கப் கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் குடைமிளகாய்- (சேர்த்து)
  3. 2முட்டை
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1 டீஸ்பூன்வெண்ணெய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1 டீஸ்பூன்மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 2 விசில் விட்டு இறக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்..

  2. 2

    பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து முக்கால் பங்கு வெந்ததும் அதில் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி நன்கு கலந்து கொள்ளவும்.பின் 2 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி சேர்த்து வதக்கவும்.மிதமான தீயில் வைத்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    நன்றாக உதிரியாக வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கவும். இப்போது சூடான சுவையான முட்டை பிரைட் ரைஸ் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes