செட்டிநாடு ஸ்பெஷல் மொச்சை மண்டி (Chettinadu mochai mandi recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#jan1 இந்த மண்டி செட்டி நாடுகளில் கல்யாணம் மற்றும் எல்லா விசேஷத் எல்லாக் காலங்களிலும் கட்டாயம் செய்யக் கூடியது மிகவும் பழமையான ஒரு பதார்த்தம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
5 பரிமாறுவது
  1. 100கிராம்மொச்சை பயறு
  2. 1/4கிவெண்டைக்காய்
  3. 50கிராம்சின்ன வெங்காயம்
  4. 5பச்சை மிளகாய்
  5. 10பூண்டு பல்
  6. 50 மில்லி லிட்டர்நல்லெண்ணெய்
  7. 2தக்காளி
  8. 50 கிராம்புளி
  9. மல்லி மிளகாய் மஞ்சள் சோம்பு தூள் தலா ஒரு ஸ்பூன்
  10. கடுகு உளுந்து வெந்தயம் ஒரு ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கு ஏற்ப
  12. அரிசி களைந்த தண்ணீர் அரை லிட்டர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    மொச்சைப் பயறை முதல் நாள் இரவு ஊற வைத்து எடுக்கவும்

  2. 2

    அதை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து இறக்கவும்வெண்டக்காயை சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்

  3. 3

    சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வெந்தயம் போட்டு கருவேப்பிலை போட்டு பூண்டு சேர்த்து வெண்டைக்காயை போட்டு வதக்கவும் வதங்கியதும் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளியை அதோடு சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்கு வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி மசாலா பொடிகளை சேர்த்து உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் கொதிக்கும்போது வேக வைத்த மொச்சை பயிறை அத்துடன் சேர்க்கவும் புளித்தண்ணீரை அரிசி களைந்த தண்ணீரில் கரைத்து எடுக்கவும்

  5. 5

    சுவையான பாரம்பரிய செட்டிநாடு ஸ்பெஷல் வெண்டைக்காய் புளி மண்டி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes