அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#nv
நல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது.

அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)

#nv
நல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 750 கிராம்,நாட்டுக்கோழி
  2. தயிர்,
  3. தேவையான அளவு,உப்பு
  4. கால் டீஸ்பூன்,மஞ்சள்தூள்
  5. தேவையானஅளவு தண்ணீர்,
  6. 4 டேபிள்ஸ்பூன்தேங்காய்
  7. மசாலாவிற்கு தேவையானவை:
  8. 2 டேபிள்ஸ்பூன்,வர மல்லி(முழு தனியா)
  9. 1 டேபிள்ஸ்பூன்,மிளகு
  10. அரை டேபிள்ஸ்பூன்,சீரகம்
  11. அரை டேபிள்ஸ்பூன்,சோம்பு
  12. சிறிதளவுபட்டை,
  13. 2கிராம்பு
  14. 10 to 15, வர மிளகாய்காரத்திற்கு ஏற்ப,
  15. சிறிதளவுபுளி,
  16. இஞ்சி ஒரு துண்டு,
  17. 7 பல்,பூண்டு
  18. 20சின்ன வெங்காயம்
  19. 1பெரிய தக்காளி
  20. கறிவேப்பிலை
  21. தாளிக்க:
  22. 3 டேபிள்ஸ்பூன்,நல்லெண்ணெய்
  23. 1பிரிஞ்சி இலை
  24. அன்னாசிப் பூ,
  25. கடல்பாசி,
  26. 10,நறுக்கிய சின்ன வெங்காயம்
  27. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து 2 டேபிள்ஸ்பூன் தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பிரட்டி கால்மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    வதக்கி அரைக்க தேவையான (மேலே கூறிய அளவு) மசாலா பொருட்களை எடுத்து வைக்கவும்.

  3. 3

    வானொலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மற்றும் புளியை கடைசியாக செய்கின்ற அனைத்தையும் நன்றாக வதக்கி ஆறவிடவும்.

  4. 4

    வறுத்த மசாலா நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க வைத்திருந்த பொருட்களை சேர்த்து வதக்கி, அதனுடன் நாட்டுக்கோழி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    அதனுடன் அரைத்த வைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் விடவும்.

  7. 7

    5 முதல் 6 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். குழம்பு நன்றாக மணமுடன் சுவையுடனும் இருக்கும்.

  8. 8

    மசாலாவை வதக்கி அரைத்து செய்த சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes