🐤🐥🥦🥬🐤🐥மிண்ட் சிக்கன் 🐤🐥🥦🥬🐤🐥

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#Flavourful
புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1/4 கிலோ - சிக்கன்
  2. 1 கப்- புதினா
  3. 1/2 கப் - மல்லி
  4. 3 - பச்சை மிளகாய்
  5. 3 மேஜைக்கரண்டி- தயிர்
  6. 1 மேஜை கரண்டி- இஞ்சி பூண்டு விழுது
  7. 1- வெங்காயம்
  8. 1தே.க - மல்லி தூள்
  9. 1 தே.க - மிளகாய் தூள்
  10. 1/2 தே.க - கரம் மசாலா தூள்
  11. 1 தே.க - சீரக தூள்
  12. 1/4 தே.க - மஞ்சள் தூள்
  13. சிறியதுண்டு- பட்டை
  14. தேவையானஅளவு- உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கலவை இயந்திரத்தில் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அதன்பின் தயிர், மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  4. 4

    சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் தயாராக அரைத்து வைத்துள்ள புதினா,மல்லி விழுதை அதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

  5. 5

    அடிபிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறி கொடுக்கவும். மேலும் பதினைந்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சுவையான மிண்ட் சிக்கன் தயார்.

  6. 6

    சிக்கனை பலவிதமான முறைகளில் செய்து ருசித்து இருப்போம்.

  7. 7

    இது மிகுந்த மணத்துடன் அட்டகாசமான சுவையில் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

  8. 8

    இதே முறையில் பன்னீர் 🧀 அல்லது மஷ்ரூம் 🍄 சேர்த்து வெஜிடேரியன் ஆக செய்து கொள்ளலாம்.

  9. 9
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes