கீ சிக்கன் பிரியாணி

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோசிக்கன்
  2. 6ஸ்பூன்நெய்
  3. 2ஏலக்காய்
  4. 1பட்டை
  5. 1பிரியாணிஇலை
  6. 2கிராம்பு
  7. 1ஸ்பூன்சீரகம்
  8. 5பச்சைமிளகாய்
  9. 2வெங்காயம்
  10. 11/2ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  11. 1தக்காளி
  12. 2ஸ்பூன்மிளகாய்த்தூள்
  13. 1ஸ்பூன்கரம்மசாலாதூள்
  14. உப்புதேவையான
  15. கைஅளவுபுதினா
  16. கைஅளவுகொத்தமல்லி
  17. 1கப்தயிர்
  18. 5கப்தண்ணீர்
  19. 21/2கப்பாசுமதிஅரிசி

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் நெய் சேர்த்து ஏலக்காய்,பட்டை, பிரியாணிஇலை,சீரகம், கிராம்பு நன்கு வதக்கவும்

  2. 2

    பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்

  3. 3

    பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின் மிளகாய்த்தூள், கரம்மசாலாதூள்,உப்பு சேர்த்து நன்கு நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

  4. 4

    பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கிய பின் கழுவி வைத்திருக்கும் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கிய பின் தயிர் சேர்த்து நன்கு கலந்து வேக விடவும்

  5. 5

    பின்னர் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அரிசி சேர்த்து குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விசில் அடங்கிய பின் பிரியாணியை மெதுவாக கிளறவும்...சூடான சுவையான கீ சிக்கன் பிரியாணி தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes