ஹரியாலி கிரில்டு சிக்கன்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#மழைக்கால உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 6 சிக்கன் கால்கள்
  2. 1கொத்து மல்லி இலை
  3. 1 கொத்து புதினா
  4. 6பூண்டு
  5. 4 பச்சை மிளகாய்
  6. 1 எலுமிச்சை
  7. 1கப் தயிர்
  8. 3மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  10. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  11. 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  12. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  13. 1 தேக்கரண்டி மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஆங்காங்கே கட் செய்துக்கொள்ளவும்.

  2. 2

    முதல் முறை ஊறவைக்க 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு எடுத்து, சிக்கன் முழுவதும் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

  3. 3

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லி, புதினா, மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  4. 4

    பின்பு ஒரு பிக்சிங் பவுலில் அரைத்த விழுது, இஞ்சி பூண்டு விழுது,தயிர், மசாலா வகைகள், எலுமிச்சை, உப்பு சேர்த்து கலந்து சிக்கன் முழுவதும் நன்றாக தேய்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

  5. 5

    சிக்கன் நன்கு ஊறினதும். கிரில் அடுப்பு தயார் செய்து சுட்டு எடுக்கவும்.

  6. 6

    ஹரியாலி கிரில்டு சிக்கன் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes