உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில் . . முட்டைகோஸ் காலிஃப்ளவர் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறிகள், #everyday4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1 கப் முட்டை கோஸ், மெல்லியதாக, பொடியாக நறுக்கியது சின்ன
  2. 1 கப் காலிஃப்ளவர், நீராவியில் வேகவைத்து சின்ன சின்னதாக நறுக்கியது
  3. 1½கப் உளுந்து
  4. 1 அங்குலம் தோலுரித்த இஞ்சி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 2 மேஜைகரண்டி அரிசி மாவு
  7. 1 சிட்டிகை பெருங்காய பொடி
  8. 1 டீஸ்பூன் மிளகாய் பொடி,
  9. 1 டீஸ்பூன் சுக்கு பொடி,
  10. 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை பொடி
  11. 1 டீஸ்பூன் மிளகு பொடி,
  12. 1 சிட்டிகை மஞ்சள் பொடி
  13. 1 டீஸ்பூன் சீரகப் பொடி
  14. தேவையானதுஉப்பு
  15. ¼ கப் கறிவேப்பிலை,
  16. ¼ கப் கொத்தமல்லி
  17. தேவையானதுஎண்ணை (refined oil உபயோகிக்க வேண்டாம்)
  18. வடை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    3 கப் நீரில் உளுந்து ஊறவைக்க வடித்து சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் அறைக்க. மாவு கெட்டியாக இருக்கவேண்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு அறைத்த உழுந்து மாவுடன், கோஸ், காலிஃப்ளவர், ஸ்பைஸ் பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி,அரிசி மாவு சேர்த்து பிசைக. உப்பு பொரிப்பதற்க்கு முன் சேர்க்க

  3. 3

    மிதாமான நெருப்பின் மேல் ஓரு கனமான வாணலியில் எண்ணையை சூடு பண்ணுங்கள். 1/4 கப் மாவை உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டிக்கொள்ளுங்கள். ஜாக்கிரதையாக மெதுவாக வடையை எண்ணையில் சேர்க்க. 4-5 வடைகள் ஒரே சமயத்தில் பொறிக்கலாம். ஜல்லி கரண்டியால் எண்ணையை சூழற்றினால் வடைகள் சமமாக வேகும். 1 நிமிடம் கழித்து திருப்புக. 2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். விண்டு பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் மீது. பொறித்த வடைகளை போட்டால் ஒட்டிய எண்ணையை நீக்கலாம்.

  4. 4

    சூடான ருசியான சத்தான வடைகள் ருசிக்க தயார்,

    விருப்பமான சட்னியுடன் வடைகளை பரிமாறுக நான் தேங்காய் சட்னியுடன் புலவுடனும் பரிமாறினேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes