முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) இரண்டுமே ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டிலும் நலம் தரும் தாவர ரசாயன பொருட்கள் (phytochemicals) ஏராளம். முட்டை கோஸில் உள்ள விட்டமின் C,(சக்தி மிகுந்த அன்டை ஆக்ஸிடெண்ட்-antioxident), இதய நோய்களையும், புற்று நோய்களையும் தடுக்கு சக்தி நிறைந்தது). கால்சியம், போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) பயோடின்(Biotin) இன்னும் பல உலோக சத்துக்கள் உள்ளன , ப்ரொக்கோலியில் இருக்கும் லூடின் ( lutein) கண்களுக்கு நல்லது; விட்டமின் K நோய்தடுக்கும் சக்தி கொடுக்கும். பாசிபயிறில் புரதத்தோடு, நார் சத்து, இரும்பு, போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) . இந்த கூட்டு செய்வது எளிது. சுவையும், சத்தும், மிக மிக அதிகம். காய்கறிகளை குறைந்த நெருப்பிலதான் வேகவைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாது. பருப்புகளை குக்கரில்தான் வேக வைக்க வேண்டும். இந்த கூட்டு நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.#nutrient1#book

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

70 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கப் பயத்தம் பருப்பு
  2. 2 கப் முட்டை கோஸ் (மெல்லியதாக நறுக்கியது)
  3. 2 கப் ப்ரொக்கோலி
  4. கூழ்:
  5. 1 மேஜைகரண்டி கொத்தமல்லி விதை
  6. 1 மேஜைகரண்டி உளுந்து
  7. 1 மேஜைகரண்டி கடலை பருப்பு
  8. 2 பச்சை மிளகாய்
  9. 2 அங்குலம் இஞ்சி
  10. 1/2 கப் தேங்காய் துண்டுகள்
  11. மற்றவை:
  12. 1 மேஜைகரண்டி நல்லெண்ணை
  13. 1 தேக்கரண்டி கடுகு
  14. 1 தேக்கரண்டி பெருன்ஜ் சீரகம்
  15. 1 தேக்கரண்டி வெந்தயம்
  16. 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  17. சிட்டிகை பெருங்காயம்
  18. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  19. 4 பல் பூண்டு
  20. 1/4 கப் கறிவேப்பிலை
  21. 1/4 கப் கொத்தமல்லி
  22. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

70 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை சேகரிக்க

  3. 3

    ஒரு கிண்ணத்தில் மூன்று மடங்கு நீருடன் பயத்தம் பருப்பை குக்கரில் வேகவைக்க. அதே சமயம் காய்கறிகளை தயாரிக்க.
    பரோக்கோலியை பிளென்ச் செய்க:--4 கப் கொதிக்கும் நீரில் போட்டு, 4 நிமிடங்களுக்குப் பின் ஐஸ் தண்ணீரில் போட்டு குளிர வைய்க்க. வடிக்க. அந்த கொதி நீர் காய்கறி ஸ்டாக்.
    மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலேட்டில் 1 தேக்கரண்டி எண்ணையில் முட்டை கோஸ் போட்டு 3 நிமிடங்கள் வதக்கி தனியாக எடுத்து வைக்க.

  4. 4

  5. 5

    கூழ் செய்ய:
    மிதமான நெருப்பின் மேல் ஸ்கிலேட்டில் கடலை, உளுத்தம் பருப்புகள். தனியா எண்ணையில்லாமல் ரோஸ்ட் செய்க. வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. வருத்த பொருட்கள நீரில் ஊற வைக்க- 10 நிமிடங்கள். தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஊற வைத்த பொருட்களை மிக்ஸியில் அறைத்து கொள்ளுங்கள்

  6. 6

    கூட்டு செய்ய:
    மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணியில் கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்க. பெருங்காயம் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்த்து கிளற. வெங்காயம் சேர்த்து வதக்க -5 நிமிடங்கள். காய்கறி ஸ்டாக்கை சேர்த்து கொதிக்க வைக்க. வேகவித்த பருப்பு, ப்ரொக்கோலி, முட்டை கோஸ் மூன்றையும் சேர்த்து கிளற. 3-4 கோதி வந்ததும் அறைத்து வைத்த கூழை சேர்த்து கிளற-2 நிமிடங்கள், உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.

  7. 7

    கொத்தமல்லி சேர்க்க. சுவையான சத்தான பொறிச்ச கூட்டு தயார்.ருசி பார்த்து பரிமாறுக. சோறு, ரொட்டி, சப்பாத்தி, தோசை, அல்லது அடையோடு சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes