ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....
#vattaaram

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
  1. 1/2கப் 1/2கப் 1/2கப் 1/2கப் 1/2கப் மைதா
  2. 1/4கப் கோவா
  3. 1/4டீஸ்பூன் ஆப்ப சோடா
  4. 2டீஸ்பூன் நெய்
  5. 2டேபிள் ஸ்பூன் கட்டித்தயிர்
  6. 2டேபிள் ஸ்பூன் நட்ஸ்
  7. பாகு தயாரிக்க:
  8. 1 &1/2 கப் சர்க்கரை
  9. 1&1/2கப் தண்ணீர்
  10. ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு மற்றும் ஆப்பசோடாவை சலித்து வைத்துகொள்ளவும். நட்ஸ் எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    பின்னர் ஒருஅகலமான தட்டில் மைதா,கோவா, நெய்,தயிர் சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  3. 3

    அப்போது பாகு தயார் செய்யவும்.
    ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,சர்க்கரை சேர்த்து ஸ்டவ்வில் வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வரும் வரை கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். சர்க்கரைப்பாகை ஆற விடவும்.

  4. 4

    பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து பெரிய நெல்லிக்காய் அளவு மாவை உருட்டி, கப் போல் செய்து நடுவில் பொடித்து வைத்துள்ள நட்ஸ் உடன் கொஞ்சம் கோவா, சமையல் கலர் சேர்த்து கலந்து வைத்து மூடவும்.

  5. 5

    அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் தயாராக வைத்துள்ள பேடாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சூடான பேடாக்களை உடனடியாக பாகில் சேர்க்கவும். ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.பாகு நன்கு சூடு ஆறி இருக்கவேண்டும்.

  7. 7

    குறிப்பிட்ட நேரம் கழித்து எடுத்தால் மிகவும் சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்.

  8. 8

    ஆற்காடு நவாப்பின் விருப்பமான மக்கன் பேடாவை அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes