எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3/4கப் இனிப்பில்லாத கோவா
  2. 3/4கப் மைதா
  3. 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 2ஸ்பூன் தயிர்
  5. 2ஸ்பூன் தண்ணீர்
  6. 2கப் சர்க்கரை
  7. 2ஏலக்காய்
  8. 2ஸ்பூன் முந்திரி பருப்பு
  9. 2ஸ்பூன் பாதாம் பருப்பு
  10. குங்கும பூ சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    அத்துடன் கோவா, தயிர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்

  3. 3

    அத்துடன் மைதா மாவு சேர்த்து தேவைபட்டால் பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பிசைந்த மாவை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

  5. 5

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 4 கப் தண்ணீர் ஊற்றி அத்துடன் ஏலக்காய், குங்கும பூ சேர்த்து பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்க விடவும்... பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  6. 6

    மாவில் சிறு உருண்டை எடுத்து தட்டையாக தட்டி நடுவில் நறுக்கிய பருப்பை வைத்து மூடி மீண்டும் உருட்டி அதை லேசாக அமுக்கி தட்டையாக தட்டி கொள்ளவும்

  7. 7

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பேடாவை பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போட்டு 2 மணிநேரம் ஊறவிட்டு எடுத்து பரிமாறவும்

  8. 8

    இப்போது சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes