முருங்கை கீரை வடை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#vadai+payasam #combo5
முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நோய் நிவாரணி
பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. வடை, பாயசம் எல்லா பண்டிகைகளிலும் உண்டு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5பரிமாறுவது
  1. ½கப் அரிசி
  2. ½கப் தோலுரித்த முழு உளுந்து
  3. ½கப் பயத்தம் பருப்பு
  4. ½கப் கொள்ளு
  5. ½கப் துவரம் பருப்பு
  6. ½கப் கடலை பருப்பு
  7. 5கார சிகப்பு மிளகாய்
  8. 1அங்குலம் இஞ்சி, தோலுரித்தது
  9. 2மேஜைகரண்டி சோள மாவு
  10. 1தேக்கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (ஓமம், தனியா, சீரகம், மிளகு
  11. கலந்து, வறுத்து பொடித்தது
  12. 1தேக்கரண்டி பெருங்காயப் பொடி
  13. ¼தேக்கரண்டி மஞ்சள் பொடி
  14. ½கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
  15. ¼கப் கறிவேப்பிலை
  16. 1கப் முருங்கை கீரை
  17. தேவையான அளவுஉப்பு
  18. தேவையானஅளவு கடலை எண்ணை, பொறிக்க

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    முருங்கை கீரை காம்புகளை நீக்கி, சின்னதாக நறுக்கி கொள்ளுக
    ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்புக்களை நிறைய நீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க. ஊற வைத்த பொருட்களை களைந்து வடிக்க. ஊற வைத்த பொருட்களை பிளெண்டரில் இஞ்சி, மிளகாய், மிகவும் சிறிது நீர் சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் கொரகொரவென்று அரைக்க. கெட்டியாக இருக்க வேண்டும் வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் போடுக., எல்லா ஸ்பைஸ் பொடிகள் சேர்க்க. கீரை இலைகள், கொத்தமல்லி, சோள மாவு சேர்த்து சுத்தமான கையால் நன்றாக பிசைக. 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க

  3. 3

    உள்ளங்கையில், சிறிது எண்ணை தடவி வடை தட்டுக நான் ஜல்லி கரண்டி மீது தட்டி எண்ணையில் சேர்ப்பேன். ½ அங்குலம் திக்காக இருக்கட்டும்
    மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான (medium low) நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான எண்ணையில் வடைகளை பொறிக்க. ஜல்லி கரண்டியால் வடைகளை எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. உடைத்து பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் வடை மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும்.
    10 வடைகள் செய்ய முடிந்தது

  4. 4

    வடை புரதமும், உலோக சத்துக்களும் கொண்ட ஆரோக்யமான உணவு. சுவைத்து விருப்பமான சட்னி, கூட பரிமாறுக. வடை பாயசம் நல்ல காம்போ

    டிப்ஸ்: கடலெண்ணையின் smoking point 450F, 232C. உஷ்ணம் அதிகமானால் degrade ஆகாது. எண்ணை degrade ஆனால் உடல் நலத்திர்க்கு கேடு விளைவிக்கும் அதிக நெருப்பில் பொறிக்காதீர்கள், பொறித்தால் வடை வெளியே சிவந்து விடும், உள்ளே வேகாது. மிதமான நெருப்பில் பொறிக்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes