சிக்கன் மந்தி பிரியாணி

Shanthi
Shanthi @Shanthi007

#vattram அரபு நாடுகளில் சமைக்கும் உணவு. நல்ல சுவை அதிகம் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கிலோ சிக்கன்
  2. 500 கிராம் பாஸ்மதி அரிசி
  3. 100 கி இஞ்சி, பூண்டு விழுது
  4. 2 வெங்காயம்
  5. 1 ஸ்பூன் மசாலா வறுத்து அரைக்க: மிளகு, சீரகம், சோம்பு
  6. 1 ஸ்பூன் பட்டை, கிராம்பு,வரமல்லி
  7. 1 காய்ந்த எலுமிச்சை
  8. 1 கருப்பு ஏலக்காய்
  9. சிறிது அளவு ஜாதிக்காய்
  10. 100 கி நெய்
  11. 5 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  12. 4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 1 எலுமிச்சை 🍋 பழம்
  14. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. தேவையான அளவு உப்பு
  16. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பிரியாணி அரிசியை ஊற வைத்து எடுக்கவும்.அனைத்து மசாலா வை கடாயில் போட்டு வறுத்து மிக்ஸியில் பொடி செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு சிக்கனில் மசாலா தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள்தூள், 🍋 சாறு பிழிந்து உப்பு சேர்த்து நன்றாக 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.அத்துடன் ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் சேர்த்து வைக்கவும்.

  3. 3

    பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய், ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன் சேர்த்து சூடாக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை போட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அத்துடன் அரைத்த மசாலா 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    பிறகு தண்ணீர் அளந்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பிரியாணி அரிசியை போட்டு மூடி வைத்து வேக விடவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். பிரியாணி ரெடி ஆனதும் அத்துடன் சிக்கன் துண்டுகளை அடுக்கி வைத்து ஒரு கிண்ணத்தில் கறி நெருப்பு வைத்து வெண்ணெய் போட்டு மூடி வைத்து விடவும். சுவையான சிக்கன் மந்தி பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes