செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4நபர்கள்
  1. வறுத்து அரைப்பதற்கு :
  2. 3டேபிள் ஸ்பூன் தனியா
  3. 3காய்ந்த மிளகாய்
  4. 6கிராம்பு
  5. 2ஏலக்காய்
  6. 1பெரிய ஏலக்காய்
  7. 2பெரிய துண்டு பட்டை
  8. 1நச்சத்திர சோம்பு
  9. 1ஜாதி பத்ரி
  10. 1ஸ்பூன் சோம்பு
  11. 1ஸ்பூன் சீரகம்
  12. 1ஸ்பூன் மிளகு
  13. 1/4கப் தேங்காய்
  14. குழம்பிற்கு தேவையானவை :
  15. 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  16. 2பெரிய வெங்காயம்
  17. 2பெரிய தக்காளி
  18. 1கொத்து கறிவேப்பிலை
  19. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  20. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  21. தேவையானஅளவு உப்பு
  22. சிக்கன் ஊற வைக்க :
  23. 1கி சிக்கன்
  24. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  25. 1எலுமிச்சை பழச்சாறு
  26. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கனில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்

  2. 2

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் எண்ணெய் விடாமல் கடாயில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்..

  3. 3

    தேங்காயும் நன்றாக நிறம் மாறும் அளவு வறுத்தெடுத்துக் கொள்ளவும்..

  4. 4

    வறுத்தெடுத்த பொருட்களை முதலில் அரைத்து விட்டு பிறகு நன்றாக வறுபட்ட தேங்காயும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு கருவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்..

  6. 6

    இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி அதுவும் வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்..

  7. 7

    எல்லாம் வதங்கியதும் அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்றாக நிறம் மாறும் அளவு வதக்கிக் கொள்ளவும்..

  8. 8

    சிக்கனை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்க்கவும் நாம் ஏற்கனவே சிக்கன் ஊற வைக்கும்போது உப்பு சேர்த்து உள்ளோம். அதனால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்..

  9. 9

    உப்பு சேர்த்த பின்னர் மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும்..

  10. 10

    இறுதியாக எண்ணெய் பிரிந்து வரும்போது புதினாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டால் அதன் வாசனை நன்றாக இருக்கும்..

  11. 11

    இப்போது சூடான சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார் இது எதனுடனும் சுவைக்க அருமையாக இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes