ரோஸ் மில்க் சிரப் குல்ஃபி(நோ ஸுகர்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

பிங்க் கலர் அனைவருக்கும் மிகவும் பிடித்த கலர்.எனவே ரோஸ் மில்க்கில் குல்ஃபி செய்யலாம் என்று எண்ணி இதனை செய்தேன்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடிக்கும்.1/2லி பாலில் 5குல்ஃபி வந்தது.செய்வது மிகமிக சுலபம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
5பேர்
  1. (1/2லி) 1க்ரீமி பால் பாக்கெட்
  2. 2டேபிள்ஸ்பூன்ரோஸ் மில்க் சிரப்
  3. 1டேபிள்ஸ்பூன்கோதுமை மாவு
  4. 5ஐஸ் க்ரீம் குச்சி

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    அடி கனமான கடாயில் பாலை தண்ணீர் விடாமல் காய்ச்சவும்.கோதுமை மாவில் பால் சிறிது விட்டு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ரோஸ் மில்க் சிரப்பில் சிறிது பால் விட்டு கலந்து கொள்ளவும்.பால் ஆடையுடன் காய்ந்ததும் அடுப்பை சிறிய தாக்கி கரைத்த கோதுமை மாவை ஊற்றி கட்டியில்லாமல் கலந்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்து சிறிது சுண்டியதும்,கலந்து வைத்த ரோஸ் மில்க் சிரப்பை ஊற்றவும்.கொதித்து சுண்டியதும் அடுப்பை அணைத்து விடவும்.

  4. 4

    ஆறினதும் டம்ளர்களில் ஊற்றி ஐஸ் க்ரீம் குச்சியை சொருகவும்.ஃபிரீசரில் 8 மணி நேரம் வைக்கவும்.பிறகு வெளியில் எடுக்கவும்.

  5. 5

    குழாயடியில் டம்ளரின் அடிப்பாகத்தை லேசாக காட்டினால்,குல்ஃபி அழகாக எடுக்க வரும். இப்போது சுவையான,வித்தியாசமான,சர்க்கரையே இல்லாத,*ரோஸ் மில்க் குல்ஃபி*தயார்.செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes