🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#AsahiKaseiIndia

என் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. மாவு பொருட்கள்
  2. 1 கப் - மைதா மாவு
  3. 1 கப் - பொடித்த சர்க்கரை
  4. 1/2 கப் - கோக்கோ பவுடர்
  5. 1தே.க - பேக்கிங் பவுடர்
  6. 1/2தே.க - பேக்கிங் சோடா
  7. 1/4 தே.க - உப்பு
  8. திரவ பொருட்கள்
  9. 3/4 கப் - காய்ச்சி ஆற வைத்த பால்
  10. 1/4 கப் - வாசனை இல்லாத எண்ணெய்
  11. 2- முட்டை அல்லது 1/2 கப் தயிர்
  12. 1 தே.க - வெண்ணிலா எசன்ஸ்
  13. அலங்கரிக்க
  14. 1 கப் - விப்பிங் க்ரீம்
  15. 2 மேஜைக்கரண்டி - பொடித்த சர்க்கரை
  16. 1 தே.க - வெண்ணிலா எசன்ஸ்
  17. 1/4 தே.க - புட் கலர்
  18. சர்க்கரை கரைசல்
  19. 4 மேஜைக்கரண்டி - சர்க்கரை
  20. 4 மேஜைக்கரண்டி - தண்ணீர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1
  2. 2

    பாத்திரத்தில் முட்டைகளைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.

  3. 3

    பிறகு மாவுப் பொருட்களை சல்லடையில் ஒவ்வொன்றாக சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    இறுதியாக பேக்கிங் பவுடர் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    அனைத்தும் ஒன்று சேர கலக்கவும் அழுத்தம் கொடுத்து விடக்கூடாது ஒரே திசையில் கலந்து விடவும்.

  6. 6

    கலந்த கலவையை தயார் செய்து வைத்துள்ள கேக் பாத்திரத்தில் ஊற்றி இரண்டு முறை தட்டவும் காற்றுக் குமிழ்கள் வெளியேற செய்வதற்காக.

  7. 7

    பிறகு 180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடங்கள் முன் கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள ஓவனில் 40 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.

  8. 8

    பிறகு ஒரு கப் விப்பிங் கிரீம் சேர்த்து அதனுடன் பொடித்த சர்க்கரை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து அடித்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  9. 9

    பிறகு சிறிதளவு க்ரீம் க்ரீமை எடுத்து கேக் செய்யும் அட்டையில் வைத்து அதன்மேல் கேக்கின் ஒரு பகுதியைக் வைக்கவும்.கேக் நகராமல் இருப்பதற்காக. பின் சர்க்கரை கரைசலை கேக்கில் தடவி பின்பு தயார் செய்து வைத்துள்ள க்ரீம் தடவவும்.

  10. 10

    கேக்கின் மற்றொரு பாகத்தை அதன் மேல் வைத்து முழுவதுமாக கிரீம் தடவிக் கொள்ளவும். பிறகு காரண வடிவம் செய்வதற்கு கேக்கில் படத்தில் காட்டியவாறு வெட்டிக்கொள்ளவும்.

  11. 11

    வெட்டிய பகுதியை கேக்கின் மேலே வைத்து கார் வடிவம் கொடுப்பதற்கு படத்தில் உள்ளது போல் முன்னும் பின்னுமாக வெட்டிக் கொள்ளவும். பிறகு கிரீமில் விரும்பிய வண்ணம் செய்து கொள்ளவும்.

  12. 12

    கேக்கை அலங்கரிப்பதற்கு ஸ்டார் வடிவத்தில் உள்ள நாசில் பயன்படுத்தி உள்ளேன்.. கண்ணாடி மற்றும் காரின் பின்பகுதிக்கு மஞ்சள் கலர் கொடுத்து வித்தியாசப்படுத்தி உள்ளேன்.

  13. 13

    கேக்கின் மேல் பகுதியை சம படுத்துவதற்காக வெட்டிய பகுதியிலிருந்து பாட்டில் மூடியை வைத்து கார்களின் வீல் செய்துள்ளேன்.

  14. 14

    குழந்தைகள் மிகவும் விரும்பும் கார் கேக் சாக்லேட் சுவையில் சுவைக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (10)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes