மீல் மேக்கர் கிரேவி

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

# PT
#weightloss gravy
இது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
3பேர்
  1. 1கப் மீல் மேக்கர்
  2. அரைக்க:
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்,காரதிற்கேற்ப
  6. 2ஸ்பூன் மல்லிதூள்
  7. 15புதினா இலைகள்
  8. 1டேபிள்ஸ்பூன் அளவு மல்லி இலை
  9. 1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்
  10. 1துண்டு இஞ்சி
  11. 8சிறிய பூண்டு பற்கள்
  12. 2துண்டு பட்டை
  13. 1ஏலக்காய்
  14. 3கிராம்பு
  15. தாளிக்க:
  16. 3ஸ்பூன் எண்ணெய்
  17. 1/2ஸ்பூன் சீரகம்
  18. கடைசியாக சேர்க்க:
  19. 1ஸ்பூன் கஸ்தூரி மெதி
  20. சிறிதளவுமல்லிதழை

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில்,தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் மீல் மேக்கர் சேர்த்து மூடி போட்டு 15நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

  3. 3

    மிக்சி ஜாரில் அரைக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைக்கவும்.

  4. 4

    அடுப்பில் கடாயை வைத்து சூடானதும்,எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து,அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின் ஊறிய மீல் மேக்கர்-ல் நன்கு தண்ணீர் பிழிந்து சேர்க்கவும்.

  6. 6

    கொதித்ததும்,மூடி போட்டு மீல் மேக்கர் வேக வைக்கவும். இதனுடன் கஸ்தூரி மேதி,மல்லி தழை சேர்த்து கலந்து விட்டு மீண்டும் மூடி வைக்கவும். இவையிரண்டும் தான் கிரேவிக்கு சுவை கூட்டும்.

  7. 7

    நன்கு கொதித்து, தேவையான கிரேவி பதம் வந்ததும்,மல்லித்தழை தூவி பரிமாறலாம்.

  8. 8

    அவ்வளவுதான். சிம்பிளான, மீல் மேக்கர் கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes