தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#vattaram இது சென்னை பீச்சில் மிகவும் பிரபலமான உணவு...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
3பேர்கள்
  1. 1கப் வெள்ளை பட்டாணி
  2. 2ஸ்பூன் பொடியாக நறுக்கிய மாங்காய்
  3. 3ஸ்பூன் துருவிய தேங்காய்
  4. 3பச்சை மிளகாய்
  5. 2துண்டு இஞ்சி
  6. 2காய்ந்த மிளகாய்
  7. 2ஸ்பூன் எண்ணெய்
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 1கொத்து கறிவேப்பிலை
  10. 1ஸ்பூன் துருவிய கேரட்
  11. தேவையானஅளவு உப்பு
  12. சிறிதளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    பட்டாணியை 8 மணிநேரம் ஊற வைக்கவும்... குக்கரில் பட்டாணியை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும்... பட்டாணி மசியும் அளவிற்கு வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    இஞ்சி பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து கொள்ளவும்..

  4. 4

    அதனுடன் வேகவைத்த பட்டாணி, அரைத்த விழுது, தேங்காய் துருவல், கேரட், மாங்காய், உப்பு சேர்த்து கலந்து 2 நிமிடம் வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  5. 5

    இப்போது சுவையான சத்தான தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (8)

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes