முருங்கைக்காய் கீர்

Ayesha Ziana
Ayesha Ziana @cook_9759012
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 முதல் 4முருங்கைக்காய்
  2. 1/2 லிட்டர்பால்
  3. 1/2 கப்சீனி
  4. சில துளிகள்ரோஸ்மில்க் எஸ்ஸென்ஸ்
  5. தேவைக்கேற்பலேசாகப் பொடித்த பாதாம்
  6. சிறிதுமில்க்மெய்ட் விரும்பினால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முருங்கைக்காயைத் தோல் சீவி, நறுக்கி, தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

  2. 2

    வெந்த முருங்கைக்காயின் தோல் நீக்கி, நார் இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் எடுத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

  3. 3

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் கொதித்து, பின்னர் லேசாக வற்றியதும், மசித்த முருங்கையை சேர்த்து சிம்மில் வைத்து இடையிடையே கிளறி கொடுக்கவும்.

  4. 4

    கலவை சற்று வற்றியதும், சீனி சேர்த்து மீண்டும் சற்று சுண்டும் வரை இடையிடையே கிளறி கொதிக்க விடவும். விரும்பினால் சிறிது மில்க் மெய்ட் சேர்க்கலாம். பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

  5. 5

    ஆறிய பின்னர் கிளாசில் ஊற்றி, மேலே ரோஸ் எஸ்ஸென்ஸ் ஊற்றி, பொடித்த பாதாமும் தூவவும்.

  6. 6

    சூப்பரான முருங்கைக்காய் கீர் தயார். இது விருந்தினர்களுக்குப் பரிமாற ஏற்ற ரெசிபி. குழந்தைகளும் விரும்பி அருந்துவார்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ayesha Ziana
Ayesha Ziana @cook_9759012
அன்று

Similar Recipes