தக்காளி குஸ்கா பிரியாணி #தக்காளி

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 1/2 கப் பிரியாணி அரிசி
  2. 5 பெங்களூர் தக்காளி பெரியது
  3. 2 வெங்காயம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/4 கப் தயிர்
  9. ஒரு கைப்பிடி புதினா
  10. ஒரு கைப்பிடி கொத்தமல்லி
  11. 3 துண்டுபட்டை
  12. 5 கிராம்பு
  13. 3 ஏலக்காய்
  14. 1/4டீஸ்பூன் சோம்பு
  15. தேவையான அளவு உப்பு
  16. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் பிரியாணி அரிசியை இரண்டு முறை அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும். தக்காளியை வேக வைத்து தோல் உரித்து அரைத்துக் வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

  3. 3

    இஞ்சி பூண்டு வாசனை வாசனை போன பிறகு கொத்தமல்லி புதினா மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    எல்லாம் வதங்கிய பிறகு ஒன்றரை கப் அரிசிக்கு இரண்டேகால் கப் அரைத்த தக்காளி சாறு சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி ஒரு கொதி வந்த பிறகு பிரஷர் குக்கரில் ஒரு விசில் வந்த பிறகு கிளறி இறக்கவும்.

  5. 5

    சுவையான தக்காளி குஸ்கா பிரியாணி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
அன்று

Similar Recipes