குக்கர் சிக்கன் பிரியாணி

அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும்.
சமையல் குறிப்புகள்
- 1
கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் கழுவி மூன்றாவது தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். எடுத்துள்ள கொத்தமல்லி புதினாவை மூன்றாக பிரித்து ஒரு பங்கை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நீளமாக வெட்டிய தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு, கசகசா, சோம்பு இவற்றை அரைத்து விழுதை சேர்க்கவும். மற்றொரு பங்கு மல்லி புதினா இலைகளை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
வதக்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து இதற்குத் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கூடவே எலுமிச்சை பிழிந்து நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
- 5
வதக்கிய பின் ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் விதத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஊறவைத்த அரிசியை வடித்து கொதிக்கும் பிரியாணி தண்ணீரரல் சேர்த்து கூடவே நெய் சேர்க்கவும்.
- 6
மீதமுள்ள மல்லி புதினா இலைகளை சேர்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து குக்கரை மூடி ஆவி வந்த பின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 7
விசில் அடங்கிய பின் குக்கரை திறந்தால் பொலபொலவென்று பாஸ்மதி அரிசி பிரியாணி குக்கரில் சூப்பராக தயாராகி இருக்கும். மிகுந்த சுவை மற்றும் மனத்துடன் இருக்கக்கூடிய இந்த பிரியாணியுடன் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி


மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)


அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா


கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)


பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி


மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)


ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)


மஸ்ரூம் பிரியாணி


குக்கரீல் சிக்கன் பிரியாணி


வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)


பாஸ்மதி வெஜ் பிரியாணி


ஸ்மோக்கி சிக்கன் தம் பிரியாணி (Smoky Chicken Dum Biriyani recipe in tamil)


குக்கர் காளான் பிரியாணி


இறால் பிரியாணி


தக்காளி பிரியாணி


வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕


மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


மஷ்ரூம் தம் பிரியாணி


பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)


குஸ்கா பிரியாணி செய்முறை


சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)


வெஜிடபிள் பிரியாணி


தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)


பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)


கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி

கமெண்ட்