எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கப்மைதா மாவு
  2. 1/2 கப்அரிசிமாவு
  3. தேவையான அளவுஉப்பு
  4. 2 தேக்கரண்டிநெய்
  5. ஒரு கப்பாசி பயிறு
  6. ஒரு கப்வெல்லம்
  7. அரை கப்தேங்காய்துருவல்
  8. கால் கப்முந்திரிபருப்பு
  9. 6ஏலக்காய்
  10. ஒரு தேக்கரண்டிசர்க்கரை
  11. ஒரு தேக்கரண்டிநெய்
  12. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அடி கனமான வாணலியில், பாசிபயிறை சேர்த்து அதை நன்கு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் வேறொரு வாணலியை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு நெய் ஊற்றி, முந்திரி, ஏலக்காய் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும்

  3. 3

    ஏலக்காய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை, முந்திரி பருப்பு. இவை மூன்றையும் மிக்ஸியில் நன்றாக பொடித்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் வறுத்து வைத்திருக்கும் பாசிபயிறை பொடித்து நன்றாக சலித்து கொள்ளவும்.

  5. 5

    வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி, கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

  6. 6

    பாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும் போதே பாசிபயிறு மாவை அதில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்

  7. 7

    அதில் தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய், இவை மூன்றையும் போட்டு நன்கு கிளறவும்.

  8. 8

    கிளறி வைத்திருக்கும் மாவை சிறி சிறு உருண்டைகளாக (அரைநெல்லி அளவு) உருட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

  9. 9

    அதன் பின் மேல் மாவிற்கு தேவையான மைதா மாவையும், அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டியிலாமல் கரைக்கவும்.

  10. 10

    3 உருண்டைகளாக சேர்த்து முக்கோன வடிவில் எடுத்து கொள்ளவும்.

  11. 11

    அதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளை தோய்த்து எடுக்கவும்.

  12. 12

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் தோய்த்து எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes

More Recommended Recipes