முந்திரிக் கொத்து

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#deepavali

நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 1 கப் பாசிப்பயறு
  2. 1/2 கப் தேங்காய் துருவல்
  3. 1/2 தேக்கரண்டி சுக்குப் பொடி
  4. 3 ஏலக்காய் பொடித்தது
  5. 3/4 கப் வெல்லம்
  6. 3மேசைக்கரண்டி தண்ணீர்
  7. மேல் மாவு தயாரிக்க
  8. 1/2 கப் அரிசி மாவு
  9. 1மேசைக்கரண்டி மைதா மாவு
  10. 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  11. சிட்டிகை அளவு உப்பு
  12. பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பாசிப்பயறை சுத்தம் செய்து நன்கு வறுத்து ஆறவைத்து கரகரப்பாகப் பொடிக்கவும்.

  2. 2

    பொடித்த மாவில் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.

  3. 3

    சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்லத்தை சிறு கம்பிப் பாகு பதத்தில் எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.

  4. 4

    மாவோடு வெல்லப் பாகை நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

  5. 5

    சிறு சிறு உருண்டைகளாக சுமார் 20 -22 உருண்டைகள் பிடிக்கலாம். உருண்டைகளை அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும்.

  6. 6

    ஒரு பவுலில் அரை கப் அரிசி மாவு, ஒரு மேசைக்கரண்டி மைதா, சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று தளரக் கரைத்துக் கொள்ளவும்.

  7. 7

    அரை மணி நேரம் கழித்து மூன்று மூன்று உருண்டைகளாக மாவில் தோய்த்துக் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  8. 8

    இரண்டு நிமிடம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

  9. 9

    சுவையான, ஆரோக்கியமான முந்திரிக் கொத்து தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes