ஆரோக்கியமான முந்திரி கொத்து

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

#deepfry
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5-8 பரிமாறுவது
  1. 1/2 கிலோ உடைத்த பாசி பருப்பு
  2. 1/2 துருவிய தேங்காய்
  3. 400கிராம் வெல்லம் (1 1/2 கப் தண்ணீர் பாகு செய்ய)
  4. 25 கிராம் எள்ளு
  5. 10 ஏலக்காய்
  6. 20கிராம் சுக்கு
  7. 250கிராம் பச்சரிசி மாவு
  8. 2டே ஸ்பூன் மைதா
  9. 1/2டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/4டீ ஸ்பூன் உப்பு
  11. 1 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசி பருப்பை வறுத்து மிக்சியில் கொர கொர என்று பொடித்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    துருவிய தேங்காய்யை பொன் நிறமாக வறுத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    எள்ளை வறுத்து கொள்ளவும்.

  4. 4

    சுக்கு மற்றும் ஏலக்காயை பொடித்து வைத்து கொள்ளவும்.

  5. 5

    அரை கம்பி பதத்திற்கு வெல்ல பாகு காய்த்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு பாத்திரத்தில் எல்லாத்தையும் சேர்த்து வெல்ல பாகையை பில்டர் செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.

  7. 7

    குட்டி குட்டி உருண்டைகளாக பிடித்து 2 மணி நேரம் தனியாக வைக்கவும்.

  8. 8

    வெளி மாவு செய்ய மைதா,அரிசி மாவு,மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து.

  9. 9

    தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  10. 10

    கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் சூடு ஆனதும் ஒரு ஒரு உருண்டையாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

  11. 11

    ஒரு பக்கம் பொரிந்ததும் மறு பக்கம் மாத்தி போட்டு பொரிக்கவும்.

  12. 12

    சுவையான ஆரோக்கியமான முந்திரி கொத்து தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes