கேரட் முந்திரி கேக் (carrot Cashew cake Recipe in Tamil)

Vikky G
Vikky G @cook_19780466
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பொருட்கள்
  2. 1 கப்கோதுமை மாவு-
  3. 1கப்வெல்லம்
  4. ½கப்கேரட் (துருவல்)
  5. ¼கப்முந்திரி (உடைத்தது)
  6. ½ கப்ரீபைன்ட் எண்ணெய்
  7. 50 மிபால்
  8. ½ டீ.ஸ்பேக்கிங் பவுடர்
  9. ½டீ.ஸ்பேக்கிங் சோடா
  10. 2 சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெல்லத்தில் ¼ கப்புக்கும் குறைவான தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்... பாகுபதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தால் மட்டும் போதும்.

  2. 2

    கோதுமை மாவு,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து 3முறை சலிந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வெல்லக்கரைசல்,பால்,எண்ணெய், கேரட் துருவல்,முந்திரி சேர்த்து நன்கு ஒரு கரண்டி வைத்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    சலித்து வைத்த மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கட்டிகள் சேராதவாறு கிண்டவும்.

  5. 5

    இதற்கிடையில் ஒரு குக்கரில் சிறிது மணல் போட்டு அடுப்பில் வைத்து 10 நிமிடம் சூடுபடுத்தவும்...(குறிப்பு:குக்கர் மூடியில் ரப்பர் டியூப்,வெயிட் எடுத்து விட வேண்டும்.)

  6. 6

    பேக்கிங் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி,கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றி குக்கருக்குள் வைத்து 40-50 நிமிடம் பேக் செய்தால் சுவையான கேக் தயார்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vikky G
Vikky G @cook_19780466
அன்று

Similar Recipes