கத்திரிக்காய் ரசவாங்கி

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#நாட்டு காய்கறி உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 250 கிராம் கத்திரிக்காய்
  2. 50 கிராம் தட்டாம்பயறு
  3. 1/4 கப் துவரம் பருப்பு
  4. நெல்லிக்காய் அளவு புளி
  5. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 2டீஸ்பூன் எண்ணெய்
  8. சிறிது கறிவேப்பிலை
  9. வறுத்து அரைக்க:
  10. 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  11. 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  12. 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை
  13. 4 மிளகாய் வற்றல்
  14. 1 துண்டு பெருங்காயம்
  15. 1/4 கப் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    கத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இது கறுத்து போகாமல் இருக்க உதவும்

  2. 2

    நான்கு மணி நேரம் ஊற வைத்த தட்டாம்பயறை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்

  3. 3

    துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்

  4. 4

    கடாயில் புளி கரைத்து விட்டு கத்திரிக்காயை சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொள்ளவும்

  5. 5

    வறுக்க தேவையான பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுத்து பின் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  6. 6

    காய் வெந்ததும் வேக வைத்த துவரம் பருப்பு,தட்டாம்பயறு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கொள்ளவும்

  7. 7

    நன்றாக கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes