பாகற் காய் காய் மாவு

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#book
இது என் மாமியார் வீட்டில் செய்யப்படும் பாகற்காய் ரெசிபி .சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ,தொட்டுக் கொண்டு சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
மூன்று பேர்
  1. பாகற்காய் 200 கிராம்
  2. உளுத்தம் பருப்பு 100 கிராம்
  3. புழுங்கல் சாப்பாட்டு அரிசி 75 கிராம்
  4. எலுமிச்சங்காய் அளவு புளி
  5. சிறிது வெல்லம்
  6. சமையல் எண்ணெய்ஒரு கப்
  7. மிளகாய்ததூள்3 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிக்க:
  11. கடுகு1sp,
  12. உளுத்தம்பருப்பு1sp
  13. பூண்டு ஆறு பல்
  14. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாகற்காயை படத்தில் காட்டியவாறு வாக்கில் ஒரு விரக்கடை நீளத்திற்கு அறிந்து கொள்ளவும்.அரிந்த பாகற்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு வைக்கவும். பிறகு நன்கு கழுவி எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு.காயை 5 நிமிடம் வத,க்கி கொள்ளவும். பிறகு புளியை தண்ணீர் விட்டு கரைத்து, அதனுடன் சாம்பார் தூள் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். வதக்கிய பாகற்காய் சேர்த்து வேகவிடவும். வெந்த பின் சிறிது வெல்லம் சேர்க்கவும்.

  2. 2

    இதற்கிடையில் உளுத்தம்பருப்பையும் அரிசியையும் தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். இவைகளை நன்கு ஆறவிட்டு, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இந்தப் பொடியை மீண்டும் ஒருமுறை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

  3. 3

    வேறு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு பூண்டு பல் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் இவற்றுடன் வறுத்த மாவை சேர்த்து கொள்ளவும். பிறகு நன்கு வெந்த காயை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும். பிறகு பத்து நிமிடம் மிதமான தீயில் மூடி வைக்கவும். இப்பொழுது காய் எல்லாவற்றுடனும் ஒன்று சேர்ந்து மொறு மொறுவென்று ஆகும் இப்போது அடுப்பை நிறுத்தி விடவும். சாப்பாட்டிற்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.

  4. 4

    சுவையான பாகற்காய் மாவு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes