முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#book
இன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2பேர்
  1. முருங்கைக்காய் 1
  2. கத்தரிக்காய் 3
  3. சிறியதக்காளி 1
  4. பூண்டு பல் 4
  5. சின்ன வெங்காயம் 10
  6. சாம்பார் தூள் ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  8. வேக வைத்த பருப்பு ஒரு சிறிய கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிக்க
  11. கடுகு அரை ஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு கால் ஸ்பூன்
  13. கடலைப்பருப்பு கால் ஸ்பூன்
  14. வர மிளகாய் ஒன்று
  15. பெருங்காயத்தூள் கால் ஸ்பூன் இவற்றுடன்
  16. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை காய் கத்திரிக்காயை நீளவாக்கில் அரிந்து அரிசி களைந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். சிறிய வெங்காயம் பூண்டு இவற்றை உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து,கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள்,கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். இவற்றுடன் அறிந்த காய்கறியை சேர்த்துக் கொள்ளவும். ஒரு நிமிடம் வதக்கிய பின்,மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். அரிசி கழுவிய தண்ணீரை வேகவைப்பதற்கு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

  3. 3

    காய்கறிகள் வெந்தபின் வெந்த பருப்பு சேர்க்கவும். ஐந்து நிமிடம் மூடிவைத்து, கொதிக்கவிடவும். தேவை என்றால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும். சுவையான கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டு ரெடி. சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes