உதிரியான  மற்றும் சாப்ட் &டேஸ்டி ராகி சேமியா

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ராகி சேமியா - 300 கிராம்
  2. கடுகு - 1/2 ஸ்பூன்
  3. உளுந்து - 1/2 ஸ்பூன்
  4. கடலைப் பருப்பு - 1ஸ்பூன்
  5. வேர்க்கடலை - 3ஸ்பூன்
  6. கருவேப்பிலை - 1கொத்து
  7. பச்சை மிளகாய் -2
  8. காய்ந்த மிளகாய் - 1
  9. வெங்காயம் - 1
  10. கொத்தமல்லி - சிறிது
  11. தேங்காய் துருவல் - 3ஸ்பூன்
  12. உப்பு - தேவைக்கு
  13. நெய் அல்லது எண்ணெய் - 2ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ராகி சேமியாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சேமியா மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 2நிமிடம் ஊற விட்டு பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின் இட்லி பாத்திரத்தில் சேமியாவை ஆவியில் 10நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து தாளித்து பருப்பு நன்கு சிவந்து வரும் வரை வதக்கவும். பின்னர் கருவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கிய உடன் ஆவியில் வேக வைத்து எடுத்த ராகி சேமியா, தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். பின் மூடி போட்டு 2நிமிடம் வேக விட்டு கிளறி சூடாக பரிமாறவும். உதிரி உதிரியான சாப்டான சுவையான ராகி சேமியா ரெடி. (விரும்பினால் 1ஸ்பூன் எலுமிச்சை சாறு கடைசியில் சேர்க்கலாம்). இதில் சர்க்கரை சேர்த்து இனிப்பாகவும் சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes