கேரட் சட்னி🥕🌶️

#czarrot #book
கேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி.
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை கழுவி தோல் நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும். 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டே இரண்டு பூண்டுப்பல் உரித்து வைத்துக் கொள்ளவும். 3 ஸ்பூன் தேங்காய் துருவல் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு 4 வரமிளகாய் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கோலிகுண்டு அளவிற்கு புளி ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து லேசாக சிவக்க விடவும்.பிறகு நான்கு வரமிளகாய் அதனுடன் சேர்க்கவும். மிளகாய் மிக லேசாக சிவக்க விடவும்.பிறகு 2 பூண்டு பல் சேர்த்து லேசாக வதங்கியவுடன் அரிந்த வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். இப்போது கேரட் துண்டுகளை நிறம் மாறும் வரை வதக்கவும்.
- 3
மேற்கூறிய எல்லாவற்றையும் நன்கு ஆற வைத்து அதனுடன் உப்பு, புளி,தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு தாளிக்கும் கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகை பொரிய விடவும் அதில் சிறிதளவு கறிவேப்பிலையை கிள்ளி தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
- 4
இப்போது சுவையான, சத்து மிகுந்த, அனைவரும் விரும்பக்கூடிய கேரட் சட்னி தயார். இட்லி தோசை சப்பாத்தி எதனுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். முயற்சி செய்து பாருங்கள் ஒரு முறை.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறிவேப்பிலை சட்னி


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕


பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)


கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕


Hotel style tomoto chutney


எள் சட்னி!


கோதுமை ரவை கிச்சடி🥕


தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️


சிகப்பு மிளகாய் சட்னி!


வரமல்லி சட்னி!


வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)


பொரி கடலை சட்னி!


வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)


நெல்லிக்காய் சட்னி


தக்காளி சட்னி


கார சட்னி!


கடலைபருப்பு சட்னி!


கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)


கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji


சவுச்சவ் தொலி சட்னி


மல்லி சட்னி!


பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)


கர்நாடகா ரெட் சில்லி சட்னி!


பாகற்காய் பொரியல்


உளுந்து சட்னி!


பாலக் கீரை சட்னி


# கேரட் சட்னி


வரமிளகாய் சட்னி 🌶️🌶️🌶️ (milagai chutney recipe in tamil)


Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)

கமெண்ட்