தக்காளிக் காய், பூண்டு ஊறுகாய் #book #nutrient

Renukabala
Renukabala @renubala123
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
பதினைந்து பேர்
  1. 1/4கிலோ பச்சை தக்காளிக் காய்
  2. 1/4கிலோ பூண்டு
  3. 1/4லிட்டர் நல்லெண்ணெய்
  4. 1டீஸ் ஸ்பூன் கடுகுப் பொடி
  5. 1டீஸ் ஸ்பூன் வெந்தயப் பொடி
  6. 50கிராம் மிளகாய் தூள்
  7. 1/4டீஸ் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 50கிராம் புளி
  9. உப்பு
  10. தாளிக்க
  11. எண்ணை
  12. கடுகு
  13. வெந்தயம்
  14. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    தக்காளிக் காயை நன்கு கழுவி, நீள வாக்கில் வெட்டி, கொஞ்சம் உப்பு, மஞ்சள் சேர்த்து, கலந்து ஒரு இரவு வைத்து விட்டு எடுத்து, வெய்யிலில் இரண்டு நாட்கள் காயவைக்கவும்.

  2. 2

    பின்பு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, வெந்தயம், கறிவேப் பிலை, பூண்டு, காய்ந்த தக்காளி, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    *தக்காளி உப்பு, மஞ்சள் போட்டு ஊற வைத்தால், அதில் நிறைய, தண்ணீர் வரும். தண்ணீரை வடித்து விட்டு காயவிடவும். திரும்ப இரவு முழுதும் அதே தண்ணீரில் போட்டு எடுத்து மீண்டும் ஒரு நாள் காயவிடவும். பின்பு எடுத்து வதக்கவும்.

  4. 4

    புளி,சூடான தண்ணீரை சேர்த்து கலந்து வடித்த, புளித்தண்ணீரை சேர்க்கவும்.

  5. 5

    பதினைந்து நிமிடங்கள் வதக்கியவுடன், எண்ணை பிரிந்து வரும்போது இறக்கவும். ***

  6. 6

    **மிதமான சூட்டில் வதக்கவும். இப்போது சுவையான தக்காளி காய் ஊறுகாய் தயார். ஒரு மாதம் வரை வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes