வாழைப் பூ கோளா (Vaazhaipoo kola recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

வாழைப் பூ கோளா (Vaazhaipoo kola recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. 1வாழைப் பூ
  2. 1 கப் துவரம் பருப்பு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 4வரமிளகாய்
  5. 1 டீஸ்பூன் சோம்பு
  6. 1/2 டீஸ்பூன் சீரகம்
  7. 5மிளகு
  8. உப்பு
  9. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  10. தாளிக்க
  11. 3 டீஸ்பூன் ஆயில்
  12. 1 டீஸ்பூன் கடுகு
  13. 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  14. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    வாழைப் பூ வை நரம்பு நீக்கி மோர் தண்ணீரில் போட்டு வைக்கவும்.துவரம் பருப்பு 1 கப் கழுவி ஊற வைக்கவும். வரமிளகாய் 4,சோம்பு 1 டீஸ்பூன்,தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்,சீரகம் 1/2 டீஸ்பூன்,மிளகு 5 எடுத்து வைக்கவும்.

  2. 2

    பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல்,சோம்பு சீரகம்,மிளகு,வரமிளகாய் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.கறிவேப்பிலை கழுவி வைக்கவும்.

  3. 3

    கடாயில் ஆயில் 3 டீஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வதக்கி உப்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.3 நிமிடம் வதக்கி அடுப்பை சிம்மில் வைக்கவும்.

  4. 4

    பச்சை வாசனை நீங்கிய பிறகு வாழைப் பூவை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு ஓட்டு ஒட்டிவிடவும்.

  5. 5

    அரைத்த வாழைப் பூவை சேர்க்கவும்.வதக்கி விடவும். ஊறிய துவரம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

  6. 6

    துவரம் பருப்பை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து கிளறி மூடி வைக்கவும். அடிக்கடி திறந்து கிளறவும்.இல்லாவிட்டால் அடிப் பிடிக்கும்.10 முதல் 15 நிமிடம் வரை உதிரியாக வெந்ததும்

  7. 7

    10 முதல் 15 நிமிடம் வரை கிளறி உதிரியாக வெந்ததும் உருண்டையாக செய்து இறக்கி விடவும்.சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes