கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.
#steam

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1/2 கப் சம்பா கோதுமை ரவை
  2. 1 கப் தண்ணீர்
  3. 4டேபிள் ஸ்பூன் நெய்
  4. 1/2 கப் வெல்லம்
  5. 1/4கப் தேங்காய் துருவல்
  6. 1டேபிள் ஸ்பூன் முந்திரி, திராட்சை
  7. ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
  8. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் சம்பா கோதுமை ரவையை சேர்த்து கலந்து, கெட்டியானதும் இறக்கிவைக்கவும்.

  2. 2

    வேறு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரை கப் வெல்லம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவைக்கவும்.

  3. 3

    கொதித்த வெல்லப்பாகில் தேங்காய் துருவல், ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள், உப்பு, முந்திரி திராட்சை சேர்த்து கலந்து, முதலில் சமைத்து தயாராக வைத்துள்ள ரவை கலவை, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    நன்கு கலந்து கெட்டியானதும் இறக்கி, சூடு ஆறியவுடன் தேவைப்பட அளவில் உருட்டி, ஆவியில் வைக்கும் தட்டில் அடுக்கவும்.

  5. 5

    பின்னர் ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, கொதித்ததும், தயாராக உருண்டைகள் வைத்துள்ள தட்டை வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

  6. 6

    இப்போது சத்தான, சுவையான, கோதுமை ரவை இனிப்பு கொழுக்கட்டை சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes