மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

நான் ஒரு இந்திய தமிழ் அமெரிக்கன். என் சமையலில் தமிழ் நாட்டு வாசனை அதிகம். இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் #deepfry

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. ஓமப்பொடி செய்ய:
  2. 2 கப் கடலை மாவு
  3. ½ கப் அரிசி மாவு
  4. 1 மேஜைக்கரண்டி வெண்ணை
  5. 2 சிட்டிகை பெருங்காயம்
  6. உப்பு தேவையானது
  7. பொறிக்க தேவையான சன்ஃபிளவர் ஆயில்
  8. காரா பூந்தி செய்ய:
  9. ½ கப் கடலை மாவு
  10. 1 மேஜைக்கரண்டி அரிசி மாவு
  11. 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  12. சிட்டிகை பெருங்காயம்
  13. உப்பு தேவையானது
  14. பொறிக்க தேவையான சன்ஃபிளவர் ஆயில்
  15. பேடா செய்ய:
  16. ½ கப் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு (ALL PURPOSE ENRICHED UNBLEACHED WHEAT FLOUR)
  17. 1 மேஜைக்கரண்டி வெண்ணை
  18. 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  19. சிட்டிகை பெருங்காயம்
  20. உப்பு தேவையானது
  21. பொறிக்க தேவையான சன்ஃபிளவர் ஆயில்
  22. மற்றவை:
  23. 2 மேஜை கரண்டி சன்ஃபிளவர் ஆயில்
  24. 1 கப் வேர்க்கடலை
  25. ½ கப் முந்திரி
  26. ½ கப் கறிவேப்பிலை
  27. 2 கப் அவில்
  28. 2 கப் கார்ன் வ்லேக் (Corn flake)
  29. 1/4 கப் மசாலா பொடி
  30. பிரிவு ஸ்நாக் மிக்சர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    ஓமப்பொடி செய்ய:
    ஒரு டம்பளரில் 1 கப் கொதிக்கும் நீரில் ஓமம் ஊறவைக்க=5 நிமிடங்கள். வடிக்க. வடித்த நீரை மாவு கலக்க உபயோகிக்க
    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் அரிசி, கடலை மாவுகளை வெண்ணை, சேர்த்து வறுக்க- 2 நிமிடங்கள். அடுப்பை அணைக்க. உப்பு பெருங்காயம் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக ஓம நீர் நீர் சேர்த்து பிசைக—சாஃப்ட் டோவ் (soft dough). ஈரத்துணியால் மூடி 15-30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. ஒரு சின்ன குழி கரண்டி சூடான எண்ணை மாவில் ஊற்றி பிசைக- ஓமப்பொடி மொரு மொருவென்று வரும்முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக சுலபமாக பிழிய. பாதி நிறப்புங்கள். கவனமாக எண்ணையின் மேலே நேரே பிழியலாம். முதலில் ஹை பிளெம் -2 நிமிடங்கள், நெருப்பை குறைக்க. திருப்பி போடுக. 2 பக்கமும் செம்பொன்னிறமாக வேண்டும். உங்கள் அடுப்பை பொருத்து 3-4 நிமிடங்கள் ஆகலாம். 2 பக்கமும் பொன்னிறமாக ஆனவுடன் வெளியே எடுத்து எண்ணை வடிக்க. பேப்பர் டவல் மேல் போடுக.ஓமப்பொடி தயார்.

  4. 4

    காரா பூந்தி செய்ய: ஒரு கிண்ணத்தில் தேவையான பொருட்களை கலக்க. நீர் சேர்த்து பஜ்ஜி பதத்தீர்க்கு மாவு செய்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணை சூடு செய்க, சூடானதும், மீடியம் லோ விலேம் (MEDIUM LOW FLAME) உபயோகிக்க. பூந்தி கரண்டியின் மேல் மாவு போட்டு ஒரு ஸபூனால் தேயுங்கள். மணி மணியாக பூந்தி விழும். கரண்டியால் அப்போ அப்போ கிளறுக. பொன்னிறமாக ஆனவுடன் வெளியே எடுத்து எண்ணை வடிக்க. பேப்பர் டவல் மேல் போடுக. சுவையான மொரு மொரு பூந்தி தயார்.

  5. 5

    பேடா செய்ய: ஒரு கிண்ணத்தில் தேவையான பொருட்களை கலக்க. நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல செய்க. மூடீ 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. 2 பாகமாய் பிரிக்க. குழவியால் 1/4 அங்குலம் திக் வட்டம் சிக. கத்தியால் ரிப்பன் போல வெட்டிக்கொள்ளுங்க, ரிப்பன்களை சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளுக (படம்) மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணை சூடு செய்க, சூடானதும், மீடியம் லோ விலேம் (MEDIUM LOW FLAME) உபயோகிக்க. பேடா துண்டுகளை எண்ணையில் பொறிக்க. கரண்டியால் அப்போ அப்போ கிளறுக. பொன்னிறமாக ஆனவுடன் வெளியே எடு

  6. 6

    எண்ணை வடிக்க. பேப்பர் டவல் மேல் போடுக. சுவையான மொரு மொரு பேடா மிக்ஸர் செய்ய தயார். மிக்சர் செய்ய மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் வேர்க்கடலை, முந்திரி, அவில். கறிவேப்பிலை வறுக்க. 3 நிமிடங்கள். அடுப்பை அணைக்க. ஒரு பெரிய தட்டில் ஆர் தம்பாளத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பேடா, கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) சேர்க்க. ஒமப்பொடியை பொடி செய்து சேர்க்க.

  7. 7

    காரா பூந்தி, மசாலா பொடி சேர்க்க. எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்க சுவையான மொரு மொரு மிக்சர் தயார்,

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes