வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#ss
ராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் ராகி மாவு
  2. 1மேஜை கரண்டி கடலை மாவு
  3. ½கப் அரிசி மாவு
  4. 1மேஜை கரண்டி எள்
  5. 1 மேஜைகரண்டி வெண்ணை
  6. ½ தேக்கரண்டி சீரகப்பொடி
  7. ½ தேக்கரண்டி ஓமப்பொடி
  8. ½ தேக்கரண்டி மிளகுபொடி
  9. ½ தேக்கரண்டி மிளகாய் பொடி
  10. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  11. மிளகு சைஸ் பெருங்காயம்
  12. ¼ தேக்கரண்டி பேக்கிங் சோடா
  13. தேவையானஉப்பு
  14. தேவையானபொறிக்க கடலெண்ணை
  15. பேஸ்ட் செய்ய:
  16. 4 சின்ன வெங்காயம் (pearl onion)
  17. 4 பல்பூண்டு
  18. 1 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
    ஒரு கிண்ணத்தில் பெருங்காய கட்டியை 1 மேஜைக்காரண்டி வெந்நீரில் ஊற வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.

  3. 3

    பேஸ்ட் பொருட்களை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள்
    மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான lநெருப்பின் மேல், ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணை கூட. மாவுகளை சேர்த்து லேசாக வறுக்க; ஒரு கிண்ணத்தில் வறுத்த மாவுகள், சீரக பொடி, ஓமம், மஞ்சள், மிளகு, மிளகாய், பெருங்காயம், உப்பு,,எள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்க. விரல்களால் ஒன்று சேர்க்க. பேஸ்ட் சேர்த்து ஒரு சின்ன கரண்டி சூடான எண்ணையும் மாவுடன் ஒன்று சேர்த்து, நீர் சிறிது சிரிதாய் சேர்த்து பிசைக; சாஃப்ட் டோ செய்ய வேண்டும்

  4. 4

    மாவை 15-30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.
    மிதத்திர்க்கும் ஒரு படி அதிகமான (medium ஹை) நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக. பிசைந்த மாவை அச்சில் வைத்து சூடான எண்ணெயில் முறுக்கு பிழிக. ஜல்லி கரண்டி மேல் பிழிந்தும் எண்ணெயில் சேர்க்கலாம். 2 நிமிடங்கள் கழித்து திருப்புக. ஜல்லி கரண்டியால் முறுக்குகளை எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். எண்ணை குமிழ்கள் மறைந்த பின் வெளியே எடுக்கவேண்டும். உடைத்து பார்த்தால் முழுக்க வெந்து விட்டதா என்று தெரியும்.

  5. 5

    முறுக்கு கருப்பாய் இருக்கும்
    இரண்டு பக்கமும் வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் முறுக்கு மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். 4 முறுக்கு செய்ய முடிந்தது.

    மொரு மொரு வெங்காய பூண்டு வாசனை வீசும் முறுக்குகள் ருசிக்க தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes