எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 குட மிளகாய்
  2. 1 வெங்காயம்
  3. 1/4 கப் பன்னீர்
  4. 2 ஸ்பூன் கடலை மாவு
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2 ஸ்பூன் வர மிளகாய் தூள்
  7. 1 ஸ்பூன் மல்லி தூள்
  8. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 வெங்காயம்
  11. 3 தக்காளி
  12. 2 ஸ்பூன் தயிர்
  13. 1/2ஸ்பூன் கடுகு
  14. 1ஸ்பூன் சீரகம்
  15. தேவையானஅளவு உப்பு
  16. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் குட மிளகாய் பட்டை பட்டையாக கட் பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் குட மிளகாய் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு கடலை மாவை தூவி கட்டி வராமல் கிளறவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி மசாலா பொருட்கள் உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    நன்கு தக்காளி வெந்து வரும் வரை மூடி வைத்து வதக்கவும். பிறகு 2 ஸ்பூன் தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.

  6. 6

    வதக்கி வைத்த வெங்காயம் குட மிளகாய் கரம் மசாலா உப்பு சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்ததும் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும். சப்பாத்தி இட்லி தோசைக்கு ஏற்றவாறு இருக்கும் இந்த குடமிளகாய் பன்னீர் மசாலா.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes