தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3/4 கிலோ மட்டன்
  2. 3 வெங்காயம்
  3. ஒரு கொத்து கறிவேப்பிலை
  4. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 2ஸ்பூன் மல்லி தூள்
  8. 1/2ஸ்பூன் கரமசாலா
  9. தேவையானஅளவு உப்பு
  10. 2ஸ்பூன் மிளகு தூள்
  11. 1ஸ்பூன் சீரகத்தூள்
  12. 2மேசைக்கரண்டி தயிர்
  13. சிறிதளவுகொத்தமல்லி
  14. 1 பட்டை
  15. 2 கிராம்பு
  16. 4 காய்ந்த மிளகாய்
  17. 1/2ஸ்பூன் சோம்பு
  18. 3 ஏலக்காய்
  19. 3மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து தயிர் கலந்து வைக்கவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு, கரமசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு மட்டனை சேர்த்து கலந்து விட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து மூடி வைத்து மட்டன் வேகும் வரை 9 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.

  5. 5

    தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் அளவு வைத்து கொள்ளவும்.அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கொள்ளலாம். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். அசத்தலான மட்டன் சுக்கா தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes