முட்டை பொடி தோசை முட்டைகோஸ் துவையல்

Meena Meena
Meena Meena @cook_23313031

#GA4 Week 3
Dosa முட்டை பொடி தோசையும், முட்டைக்கோஸ் துவையலும் சூப்பர் காம்பினேஷன்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2நபர்
  1. ஒரு கப் மாவு
  2. இரண்டு முட்டை
  3. சிறிதளவுஇட்லி பொடி
  4. சிறிதளவுஆயில்
  5. முட்டைகோஸ் துவையல் ஒரு கப் முட்டைக்கோஸ்
  6. 2 வெங்காயம்
  7. 3 தக்காளி
  8. ஆறு வர மிளகாய்
  9. சிறிதளவுகொத்தமல்லி புதினா கருவேப்பிலை
  10. 4 பூண்டு பல்
  11. சிறிதளவுபெருங்காயத்தூள்
  12. கடுகு, உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கப் மாவை தோசையாக வார்த்து அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி

  2. 2

    அதன் மீது இட்லி பொடியைத் தூவி திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் முட்டை பொடி தோசை தயார்

  3. 3

    முட்டைக்கோஸ் துவையலுக்கு ஒரு வாணலியில்எண்ணை விட்டு கடுகு,உளுந்தம் பருப்பு,கடலைப்பருப்பு சிறிது சேர்த்து பின் வெங்காயம் வரமிளகாய் சேர்த்து அதில் முட்டைக் கோஸ் சேர்த்து நன்றாக வதக்கி அதில் முட்டைகோஸ்,புதினா கொத்தமல்லி கருவேப்பிலை,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி தக்காளியையும் சேர்த்து வதக்கி

  4. 4

    வதக்கிய அனைத்தையும் மிக்ஸி கப்பில் சேர்த்து சிறிதளவு உப்பும் புளியும் சேர்த்து

  5. 5

    அரைத்து எடுக்க முட்டைகோஸ் துவையல் தயார்.முட்டை பொடி தோசை முட்டைகோஸ் துவையலும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes